பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் மதிக்கக்கற்றுக் கொடுக்கவேண்டும்:கார்த்தி ப சிதம்பரம்

பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் மதிக்கக்கற்றுக் கொடுக்கவேண்டும்:கார்த்தி ப சிதம்பரம்
X

சிகங்கையில் பேட்டியளித்த மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம்

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் முயற்சி, அடுத்த ஆண்டு நிச்சயம் வெற்றி பெறும்

கடுமையான சட்ட திட்டங்களால் பாலியல் குற்றங்களை தடுக்க முயற்சிப்பதை விட, பெண் குழந்தைகளை , ஆண் குழந்தைகள் மதிப்பதற்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார் சிவகங்கை எம்பி . கார்த்தி ப சிதம்பரம்.

சிவகங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் முயற்சி, அடுத்த ஆண்டு நிச்சயம் வெற்றி பெறும். நீட் தேர்வு இல்லாவிட்டாலும் அரசு பள்ளிக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தரவேண்டும். கடுமையான சட்ட திட்டங்களால் பாலியல் குற்றங்களை தடுக்க முயற்சிப்பதைவிட பெண் குழந்தைகளை , ஆண் குழந்தைகள் மதிக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!