அதிகாரிகள் வராததால் காத்துக்கிடக்கும் லாரிகள்

சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் வராததால் காலையிலிருந்து நெல் ஏற்றிவந்த லாரிகள் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் குடோன்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்களை சேமித்து வைப்பது வழக்கம். இந்த முறை விவசாயிகளிடமிருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்ததால் வைப்பதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களான காரைக்குடி, திருப்பரங்குன்றம் மானாமதுரை அழகிய பெரிய கொள்முதல் நிலையங்களில் வைக்க இடமில்லாமல் சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள பழைய அரிசிகுடோனில் வைப்பது என முடிவு செய்த சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் செய்த லாரிகளை சிவகங்கைக்கு வரவழைத்தது.

ஆனால் பழைய நெல் குடோனை சுத்தம் செய்ய யாரும் வராததால் காலை 7 மணியிலிருந்து 20க்கும் மேற்பட்ட லாரிகள் காத்துக் கிடந்தன. மேலும் நெல் மூட்டைகளை இறக்குவதற்காக வந்திருந்த லோடு மேன்கள் காலையிலிருந்து சாப்பிடாமல் காத்து கிடந்ததால் விரக்தியில் உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்