சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு
X

சிவகங்கை  மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

ஒரே குடும்பத்தில் ஆண்கள் இருவரும் ஒமைக்ரான் தொற்றால் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் ஒமைக்ரான் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆளுநரை சேர்ந்த 47 வயது நபர் துபாயில் இருந்து வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று அறிகுறி தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த காரைக்குடியை சேர்ந்த 42 வயது நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. இவர் காரைக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் மூலமாக அதே குடும்பத்தில் இந்த இருபத்தி ஆறு வயதான மற்றும் முப்பத்தி ஆறு வயது ஆண்கள் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை துணைஇயக்குனர் ராம்குமார் கூறுகையில், ஒமைக்ரான் அறிகுறி இருப்பதால் சளி மாதிரிகள் சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவை பொறுத்து தான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story