மாஸ்க் அணியாமல் செல்லும் மாணவ,மாணவிகள்

மாஸ்க் அணியாமல் செல்லும் மாணவ,மாணவிகள்
X

சிவகங்கையில் மாஸ்க் அணியாமல் பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கொரோனா நோய்த்தொற்று பரவலில் சிவகங்கை மாவட்டம் குறைந்த அளவில் உள்ளது என்றாலும் மாவட்டத்தில் நாள்தோறும் பலர் நோய் தொற்று பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளில் ஒரு சிலர் மட்டுமே மாஸ்க் அணிந்து செல்கின்றனர்.

பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் செல்வதால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று தெரிவித்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது

Tags

Next Story
ai as the future