காசி விஸ்வநாதர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

காசி விஸ்வநாதர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
X

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற்றது.

சிவகங்கை நகர மையப்பகுதியில் அமைந்துள்ளது புராண சிறப்பு மிக்க பழைமையான விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விசுவநாத சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரப் பெருவிழா திருத்தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் தனி சன்னதியில் முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார். பங்குனி மாதத்தில் முருகப்பெருமானுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை தேவியர்களுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story