புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தொழிற் பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்பு
சிவகங்கையில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலன், மற்றும்,திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன்.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பயிற்சியை அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதே தமிழக அரசின் நோக்கம் என்றார் அமைச்சர் சிவி. கணேசன்.
சிவகங்கையில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன், மற்றும்,திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பு விரைவில் மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது தமிழகத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 25,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.அதனை 50,000 என அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவாக உள்ளது என்ற அமைச்சர், கிராமப் புறங்களில் அதிக வேலை வாய்ப்பை தரும் தொழிற் பயிற்சி படிப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் கணேசன். இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu