சிவகங்கை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

சிவகங்கை அருகே பணப்பட்டுவாடா புகாரையடுத்து அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 நாட்களே உள்ளநிலையில் கண்காணிப்பு பணியை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் புகார் தெரிவித்தவுடனே உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து அவரது வீட்டில் வட்டாட்சியர் மைலாதி தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!