பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது குறித்து ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது குறித்து  ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X

பொங்கல் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது குறித்து ரேஷன் கடைகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி ஆய்வு செய்தார்.

வீட்டைவிட்டு வெளியே சென்றிருப்பவர்கள் ஊருக்கு வந்தவுடன் அவர்களுக்கான பொருட்கள் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்

பொங்கல் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது குறித்து ரேஷன் கடைகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி ஆய்வு செய்தார்.

சிவகங்கை நகர் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவகங்கை நகர் காந்தி வீதி பெருமாள் கோவில் வீதி மற்றும் 26 ஆகிய பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இருபத்தி ஒரு வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் பொருட்கள் வாங்கும் பயனாளிகளிடம் பொருட்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது: வீட்டைவிட்டு வெளியே சென்றிருப்பவர்கள் ஊருக்கு வந்தவுடன் அவர்களுக்கான பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!