வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த வேட்பாளர்கள்.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த வேட்பாளர்கள்.
X

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளில் சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த வேட்பாளர்கள்.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த வேட்பாளர்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ,காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகளும் நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, கானாடுகாத்தான், கண்டனூர் ,கோட்டையூர், நெற்குப்பை, பள்ளத்தூர், புதுவயல் ,சிங்கம்புனரி, திருபுவனம், திருப்பத்தூர் என 11 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 285 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் திமுக ,அதிமுக,அமமுக, பாஜக, தேமுதிக ,நாம் தமிழர் ,தமிழ் மக்கள் நீதி மையம், காங்கிரஸ், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!