துண்டுகள் பறிமுதல்: அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்
வாக்காளர்களுக்கு போர்த்துவதற்கு வைத்திருந்த துண்டுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி அலுவலகம் எதிரே வாக்காளர்களுக்கு போர்த்துவதற்காக வைத்திருந்த 19 துண்டினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிலையில் வேட்பாளர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகராட்சி அலுவலகம் எதிரே 14 வார்டு பகுதியில் விமலா முருகானந்தம் என்பவர் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமலா மற்றும் அவரது கணவர் முருகானந்தம் இருவரும் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களை வீடு,வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டதுடன் துண்டுகளை போர்த்தி மரியாதையும் செய்துள்ளனர்.
இது குறித்த ரகசிய தகவல் பறக்கும் படை வட்டாட்சியர் மயிலாவதிக்கு கிடைத்த நிலையில் உடனடியாக அங்கு சென்ற பறக்கும் படையினர் குழு அவர்களிடம் இருந்த 19 துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளரின் கனவர் தன்னிடம் துண்டு வாங்கியதற்கான பில் இருப்பதாகவும் இதனை தேர்தல் செலவுகளில் காண்பிக்க உள்ள நிலையில் யாரோ தூண்டுதலின் பேரில் இதுபோன்று பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu