சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீ குளிக்க முயற்சி

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீ குளிக்க முயற்சி
X
சிவகங்கை மாவட்ட கலெக்டர அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சொத்துப் பிரச்சினையில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த லாடனேந்தலை சேர்ந்த சண்முகசிவா என்பவரை போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்

லாடனேந்தல் கிராத்தை சேர்ந்த பர் சண்முகசிவா. இவருக்கு சொந்த நிலம் உள்ளது அதில் விவசாயம் செய்து வருகிறார். இவரது சகோதரர்கள் இவருக்குரிய சொத்துக்களை முறையாகப் பிரித்து கொடுக்காமல் பிரச்சனை செய்வதாகவும் அபகரிக்க முயற்சிப்பதாக பல்வேறு புகார் கொடுத்தும் பேசி தீர்வு காணாவில்லை.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து சண்முகசிவா தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் அவரை போலீசார் தடுத்து சிவகங்கை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் சிறுதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!