கி.பி. 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை, லிங்கம் சிலை கண்டெடுப்பு
மல்லல் கிராம காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மல்லல் கிராம காட்டுப்பகுதியில் 60 ஆண்டு காளி கோயில் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் அப்பகுதியில் மண் கரைந்து பூமியில், 4 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கி.பி 10ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை ஒன்று இருப்பதை கண்டறிந்து கிராம மக்கள் காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவம் இடம் சென்ற வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் புத்தர் சிலையை மீட்டு காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்தார். அதேபோல் மறவமங்கலம் அருகே ஒன்றும், கண்மணி கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்தபோது முக்கால் அடி உயரமுள்ள லிங்கம் சிலையை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து காளையார்கோவில் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லிங்கம் சிலை மீட்கப்பட்டது. இவ்விரு சிலைகளும் இன்று சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் சிலைகளை ஒப்படைக்க அதனை அருங்காட்சியக காப்பாளர் பெற்றுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu