சிவகங்கை அருகே ஒக்கூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி

சிவகங்கை அருகே ஒக்கூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி
X

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே நடந்த சாலை விபத்தில்  இரண்டு இளைஞர்கள் பலியானார்கள்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே நடந்த சாலை விபத்தில் மருது பாண்டியர் விழாவிற்கு சென்ற இருவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தில் பங்கேற்க,மானாமதுரை சேர்ந்த அஜித் பாரதி முருகானந்தம், ராஜேஸ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரை நோக்கி வந்துள்ளனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் சாசகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூவரும்,ஒக்கூர் அருகே வந்த போது திருச்சியிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசு பேருந்தில் மோதியதில் அஜித் பாரதி (18) முருகானந்தம் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்த மதகுபட்டி காவல் நிலையத்தினர்,விபத்தில் பலியான இருவரது உடலையும் கைப்பற்றி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்த ராஜேஸ் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதகுபட்டி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!