மோதிரத்தை விழுங்கிய குழந்தை: எண்டோஸ்கோபி மூலம் உணவு குழாயில் இருந்த மோதிரத்தை அகற்றியது மருத்துவக் குழு.

சிவகங்கையில் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த மோதிரத்தை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றினர்.

சிவகங்கையில், குழந்தையின் உணவுக்குழலில் சிக்கியிருந்த மோதிரத்தை நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் மயக்க மருந்து கொடுத்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் மோதிரத்தை அகற்றினர்.

சிவகங்கை மாவட்டம் சண்முகராஜா தெருவை சேர்ந்த ராம்பிரசாத் - நிரஞ்சனா தம்பதிகளின் இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தபோது, தன் கையில் வைத்திருந்த 1/2 சவரன் மோதிரத்தை விழுங்கியுள்ளது. குழந்தை வாந்தி எடுத்தும்,உணவு உட்கொள்ள மறுத்ததை அடுத்தும் ,பெற்றோர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு நுண் கதிர் படம் எடுத்துப் பார்த்த போது, உணவுக்குழாயின் மேல்பகுதியில், மோதிரம் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து, காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் நாக சுப்பிரமணியன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தி எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் மோதிரத்தை அகற்றினர். சிகிச்சைக்கு பின் குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!