பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தது அதிமுக, பாஸ்கரன்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தது அதிமுக, பாஸ்கரன்
X

கட்சியினராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது அதிமுக அரசு தான் என கனிமொழி விமர்சனத்திற்கு அமைச்சர் பாஸ்கரன் பதில் அளித்தார்.

சிவகங்கையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், பொள்ளாச்சி சம்பவத்தில் கட்சியினராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது இந்த அரசே என்றார்.மேலும் பெண்களுக்கென எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கியதும் அதிமுக அரசு தான் என்றார். அதே போல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர் சேதாரம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முதலமைச்சரிடம் பேசி இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!