சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரத் துறையின் மூலம் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேசும்போது தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 27-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 1264 மையங்களில் நடைபெற உள்ளது. முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
மேலும் பொதுமக்கள் நலன் கருதி நடமாடும் மையங்கள், மற்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது
அதேபோல் ரெட் கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் பொதுமக்களின் செயல்களுக்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சொட்டு மருந்து முகாமுக்கு பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூகநலத்துறை, ஊட்டச்சத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, தொடக்க கல்வித்துறை மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து 5060 பேர் பணியாற்ற உள்ளனர்
எனவே பொதுமக்கள் 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu