கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆவணங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
1இலட்சம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமில் உள்ளதாக கூறும் H.ராஜா அதற்கான ஆவணங்களை கொடுத்தால், அதனை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
சிவகங்கையில் நேற்று கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதை பார்வையிட வந்த இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார். மேலும்,
கோவில்களுடைய சொத்துக்களை யார் அபகரித்து இருந்தாலும் அதனை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், திருக்கோவில்களுடைய சொத்துக்களை யார் அபகரித்தாலும் ஆண்டவன் கொடுக்கும் உரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் கூறினார். கோவில் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளார்கள் என்று கூறிய அமைச்சர், அரசினுடைய பதிவேடுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்து கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும், மற்றவர்களை குறை சொல்லாமல் ஆன்மீக சொத்துக்களை பாதுகாக்க எங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்,
கோவில் சொத்துக்களை அபகரித்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு எச்சரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu