சிவசங்கையில் சாராயம் காய்ச்சியவர் கைது.

சிவசங்கையில் சாராயம் காய்ச்சியவர் கைது.
X

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. எனவே மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாராய ஊறல் போடப்படுவதும், கள்ளச் சாராயம் காய்ச்ச முயற்சி செய்வதும் நடந்து வருகிறது. அவர்களை காவல்துறை தேடித்தேடி கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்த சேவுகமூர்த்தி(45) என்பவரது வீட்டில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் ஜீவரத்தினம் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது இரண்டு தண்ணீர் குடத்தில் போடப்பட்டிருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு