சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியினை அமைச்சர்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி   பணியினை அமைச்சர்கள் ஆய்வு
X

கீழடி அகழ்வாய்வு பணியினை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன்  ஆய்வு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியினை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே ஆர் பெரியகருப்பன் ஆய்வு செய்தனர்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அகழ்வாராய்ச்சி பணியினை ஆய்வு செய்து வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணி 2020 வரை தொடர்ந்து ஆறு கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

இந்த அகழாய்வு பணியின் போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கட்டடங்கள், மணிகள், தங்கத்திலான பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அந்தப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்த 4 இடங்களிலும் ஏழாவது கட்டமாக நடைபெற இருந்த அகழ்வாராய்ச்சி பணி கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழையின் காரணமாக குழியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக பணியாளர்கள் ஈடுபட்டு இருந்ததாகவும், தற்போது அகழாய்வு பணியை மேற்கொள்வதற்கு அனைத்து பணிகளும் ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும் போது, தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி அறிக்கையினை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும். உலகளவில் பேசப்படும் அளவில் கீழடி அருங்காட்சியகம் அமையும். கொரானா ஊரடங்குக்கு பிறகு அகழ்வராய்ச்சி பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.தொல்லியல் துறை அகழாய்வில் தமிழ்நாடு 2600 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டுள்ளது என்பது உறுதி என்றும் கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக குறுவாள் கிடைத்துள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்