திருப்பாச்சேத்தி அருகே இளைஞர் வெட்டிக்கொலை: போலீஸார் விசாரணை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே இளைஞர் கொலைசெய்யப்பட்டதால் கதறி அழும் உறவினர்கள்
திருப்பாச்சேத்தி அருகே இளைஞர் வெட்டிக்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் . திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாத்தூர் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந் திரன் மகன் பாலமுருகன் ( 21 ) . திங்கள் கிழமை இரவு வீட்டி லிருந்து கிளம்பி வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை . குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றபோது மீனாட் சிபுரம் கிராமத்தில் உள்ள காலி வீட்டுமனை அருகே அரிவாளால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தார் . திருப்பாச்சேத்தி போலீஸாரின் விசாரணையில் 5 பேர் கொண்டகும் பல் பாலமுருகனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது . கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை . போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu