கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு: கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு

கல்யாணம் உங்களுக்கு,  கட்டிங் எங்களுக்கு:   கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு
X

மானாமதுரையை கலக்கும் திருமண வாழ்த்து பிளெக்ஸ் 

கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு: மானாமதுரையை கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த மாதம் வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்று வந்தது. தற்போது அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. பல்வேறு இடங்களில் அதிகமாக திருமணம் நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக திருமண வீடுகளில் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பிளக்ஸ் போர்டு வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதை போன்று மானாமதுரையில் நடைபெறும் ஒரு திருமண விழாவிற்காக மானா மதுரையைச் சேர்ந்த மணமகனின் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி, மது பாட்டில்களின் பெயர்களை அடைமொழியாக தங்களது பெயரோடு சேர்த்து பிளக்ஸ் போர்டு அடித்து திருமண மண்டபம் முன்பாக வைத்துள்ளனர்.

மேலும் கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு என்ற வாசகத்தோடு பிளக்ஸ் போர்டு வைத்துள்ளதை பார்க்கும் பலர் மது பாட்டில்களின் அடைமொழியோடு பெயர் போட்டிருப்பதையும் பார்த்து சிரித்துக்கொண்டே செல்கின்றனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா