மூன்றாவது அலை வந்தாலும் தடுக்க தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருப்பூவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பூவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாமை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த மாதம் மற்றும் ஒரு கோடியே 42 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த ஒரு கோடியே 4 லட்சம் அதைவிட அதிகமாக 30லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது .
இந்த மாதம் ஒரு கோடியே 23 லட்சம் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையும் சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் கடந்த மாதத்தை போல ஒன்றி அரசு தடுப்பூசிகள் அதிகமாக தரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்.
மூன்றாவது அலை வரக் கூடாது அது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 62% முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது இது ஒரு பெரிய பாதுகாப்பான சூழல் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐசிஎம்ஆர் சொல்வதுபோல 70% மேல் தடுப்பூசி செலுத்திவிட்டால் எந்த அலை வந்தாலும் அதிலிருந்து மக்களை காத்து விடலாம். பெரிய ஒரு உயிர் சேதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது . அந்த வகையில் இந்த 70%தடுப்பூசியை அக்டோபர் இறுதிக்குள் எட்டிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நேற்று வரை 62 % வரை முதல் தடுப்பூசி 20% வரை இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது இந்த மாதம் இறதிக்குள் உறுதியாக70% இலக்கை எட்டி விடும் என்று நம்பிக்கை இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu