மானாமதுரையில் தண்ணீரில் தத்தளிக்கும் பாம்பு பிடிக்கும் தொழிலாளர் குடும்பத்தினர்

மானாமதுரையில் தண்ணீரில் தத்தளிக்கும் பாம்பு பிடிக்கும் தொழிலாளர் குடும்பத்தினர்
X

பாம்பு பிடிப்பவர்கள் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்

மானாமதுரையில் பாம்பு பிடிக்கும் தொழிலாளர் வசிக்கும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி அவதியடைந்து வருகின்றனர்

மானா மதுரையில் பர்மா காலனி பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தொடர்ந்து பெய்த மழையால் இவர்கள் வசித்த குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அருகேயுள்ள ஆதனூர் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கியுள்ளது

தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து, தற்போது அவர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இரவு நேரங்களில் அருகிலுள்ள அரசு பள்ளியிலும் பகல் நேரத்தில் தங்களது குடியிருப்புக்கு அருகே உள்ள மேடான பகுதியிலும் தங்கியுள்ளனர்.

தண்ணீர் சூழ்ந்துள்ள தங்களது வீடுகளில் சமைக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் பர்மா காலனி பகுதியில் வசிக்கும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வம், கணேசன் ஏற்பாட்டின் பேரில் உணவு சமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil