மதுரை- ராமேஸ்வரம் சாலையில் தனியார் பேருந்துகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்
மதுரை - ராமேஸ்வரம் பிரதான நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை - ராமேஸ்வரம் பிரதான நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமம் உள்ளது. இந்தக்கிராமம் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இக் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய செய்வதற்கு மதுரை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் இந்தக கிராமத்தின் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் எதுவும் கிராமத்தில் நிற்பதில்லையாம். இதுகுறித்து ஏற்கெனவே தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை நிறுத்திச்செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையை மதிக்காமல் தனியார் பேருந்துகள் கிராமத்தில் நிற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த100 மேற்பட்ட கிராம மக்கள் மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேரில் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்
தகவலறிந்து வந்த மானாமதுரை தாசில்தார் தமிழரசன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நிற்காத பேருந்துகளில் மீது அபராதம் விதிகத்தார்.மேலும் தாசில்தார் அனைத்து பேருந்துகளும் உங்கள் கிராமத்தில் நிற்கும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தால் மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu