ஆடிவெள்ளி: மடப்புரம் கோயிலில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூடியதால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது

ஆடிவெள்ளியில் கோயில்களில் சமூக இடைவெளியை மறந்து கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இந்தக் கோயில், கொரானா காலகட்டத்தில் மூடியிருந்ததால் பக்தர்கள் வர இயலவில்லை. இப்பொழுது தமிழக அரசால் கொரானா ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும், ஆடி மாத பௌர்ணமி நாள் என்பதாலும் அதிகாலை 6 மணி முதலே பக்தர்கள் கோவிலுக்கு படையெடுக்க தொடங்கினர். மேலும், நேரம் ஆக ஆக மதியம் ஒரு மணி அளவில் உச்சிகால பூஜை இந்த கோவிலில் அதில் விமர்சையாக நடைபெறும் என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது .
திருப்புவனம் வைகை மேம்பாலத்தைக்கடந்து சுமார் 50,000 பக்தர்களுக்கு மேல் வந்து காளியின் தரிசனம் பெற்றுச் சென்றனர். திருப்புவனம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் கண்காணித்தனர். வாகனங்கள் அனைத்தும் ஒரு கிலோ மீட்டர் முன்பு உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கோயில் நிர்வாகம் சவுக்கு கட்டைகள் கொண்டு பாதைகள் அமைத்திருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu