அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து

அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து
X

பேருந்து சக்கரம் தனியே கழன்ற சிசிடிவி காட்சி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பேருந்து முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடி விபத்து

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாரநாடு ஊரில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு நகரப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பஸ் நிலையம் அருகில் வரும் போது இடது பக்கம் உள்ள முன் சக்கரம் தனியாக கழன்றது. சக்கரம் பேருந்தை விட்டு ஓடி முன்னால் நின்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விழுந்ததால் உயிர்சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

கொரோனா காலகட்டங்களில் பேருந்துகள் ஓடாத நிலையில் மீண்டும் ஓட்ட ஆரம்பிக்கும் போது பேருந்து நிலையை சீர் செய்யாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல இடங்களில் பேருந்துகள் பழுதடைந்து நிற்கும் நிலையும் உள்ளது. அதுபோல இந்த விபத்து திருப்புவனத்தில்நடந்துள்ளது. இதுவே நான்குவழிச் சாலையில் வேகமாக சென்றிருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!