திருப்புவனம்: வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், காசியில் கொடுத்த புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் ஆடி அம்மாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை போன்ற நாட்களில் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரை தேனி விருதுநகர் புதுக்கோட்டை ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வந்து திதி கொடுப்பது வழக்கம்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிப்பு அமலில் உள்ளது. இதனால், பல ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள், தாங்களாகவே வைகை ஆற்றில் இறங்கி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து சென்றனர்.
திதி கொடுத்தவர்கள், திருப்புவனத்தில் இருக்கும் அருள்மிகு சௌந்தரநாயகி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் போடுவதும் வழக்கமாகும். அதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதால் மோட்ச விளக்கை கோவிலின் வாசலிலேயே வைத்துவிட்டு பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். மழைக்காலம் என்பதால் நீர்வரத்து அதிகம் இருக்கிறது; எனினும், ஆபத்தையும் அறியாமல் பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்கி தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu