/* */

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள்: அச்சத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்

இந்த பள்ளி கட்டிடத்தின் உள்ள பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரைகள், சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன

HIGHLIGHTS

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள்: அச்சத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்
X

சேதமடைந்த பள்ளி கட்டடத்தின் உள்ளே மாணவ மாணவிகள் பயிலும் சூழ்நிலையால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள ‌பர்மா காலனியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி‌ உள்ளது ,இங்கு 3 பள்ளிகட்டிடம் உள்ளது இப்பள்ளியில் தற்போது வரை சுமார் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் பயின்று வரும், மூன்று பள்ளிகட்டிடங்களும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் உள்ள பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரைகள், ஓடுகள் கதவுகள், ஜன்னல்கள் சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் சுவர்களில் இருந்து தண்ணீர் கசிந்து உள்ளே வருவதால் அவ்வப்போது மேற்கூரையில் பெயர்ந்து கீழே விழுகின்றன, இதனால் பெரும்பாலும் மழைக்காலங்களில் வகுப்பறைகளில் பள்ளி வகுப்பறையில் நடப்பதில்லை. இதுமட்டுமில்லாமல் எந்த ஒரு பிடிமானமும் இன்றி எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. இத்தகைய அபாயகரமான நிலைமையிலுள்ள பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக தமிழ்நாடு அரசு நேரடி கவனத்தில் எடுத்து, சேதமடைந்துள்ள இந்த இடிந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்