நாடுமுழுவதும் பைக்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்த மாணவர்

நாடுமுழுவதும் பைக்கில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்த  மாணவர்

இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்த  மாணவர்

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்தியா முழுவதும் மோட்டார் பைக்கில் பயணம் மேற்கொண்டார்

இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர் செய்த 19வயது மாணவர் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட் மற்றும் ஏசியா புக் ஆப் ரிக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார் சொந்த ஊரில். பொது மக்கள் உற்ச்சாக வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன்(19.) இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

பைக்கில் விழிப்புணர்வு பதாகையினை ஏந்தி கன்னயாகுமரியில் துவங்கி இந்தியாவின் 29 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள், மற்றும் நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் வழியாக 39 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி பயணத்தினை நிறைவு செய்தார். இளவயதில் இந்தியா முழுவதும் பைக்கில் தனியாக சுற்றி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தது சாதனையாக இந்தியா புக் ஆப் ரிக்கார்ட் மற்றும் ஏசியா புக் ஆப் ரிக்கார்ட் புத்தகத்தில் இளைஞர் மணிகண்டனின் பெயர் இடம் பெற்றது.

அதற்கான சான்றிதழுடன் அவரது சொந்த ஊரான மானாமதுரைக்கு வந்த சாதனை இளைஞர் மணிகண்டனுக்கு பெற்றோர்கள், நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் உற்ச்சாகமாக வரவேற்பு வழங்கினர். அப்போது சாலையோரம் 25 மரக்கன்றுகளை நட்டு அனைவரது பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டார்.

Tags

Next Story