சிவகங்கை: தனியார் மருத்துவமனை நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது

சிவகங்கை: தனியார் மருத்துவமனை நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது
X

சிவகங்கை மாவட்டம், கல்குறிச்சி கிராமத்தில் நிலத்தை அளவீடு செய்யச்சென்ற வருவாய்த்துறையினரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சாமி ஆடியும், தீக்குளிக்க முயற்சி செய்தும் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தனர்

சிவகங்கை மாவட்டம், கல்குறிச்சியில் தனியார் மருத்துவமனை நிலத்தை அளக்க வந்த வருவாய் துறையினரை மறித்த சிலரை போலீசார் கைது செய்தாதால் பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்குறிச்சி கிராமத்திற்கு அருகே தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் உள்ளது. , அந்த நிலம் தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அந்த இடத்தில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. மேலும், அந்த இடத்தை தனியார் மருத்துவமனைக்கு அளவீடு செய்து தரக்கோரி வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பின் பேரில், அந்த இடத்தை அளவீடு செய்து கொடுக்கக் கோரி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வருவாய் துறையினருக்கு மனு கொடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் கல்குறிச்சி கிராமத்திற்கு அருகே உள்ள அந்த இடத்திற்கு அளவீடு செய்ய சென்றபோது, கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் சாமி ஆடியும், ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தும் நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story