சிவகங்கை மாவட்டம் சுமார் 40,000 ஏக்கர் நெல் சாகுபடி
சிவங்கை மாவட்டம், இளையாங்குடி சுற்றியுள்ள கிராம பகுதியில் சுமார் 40,000 ஏக்கர் வரை நெல் விவசாயம் செய்துள்ளனர், இதில், என்.எல்.ஆர்,ஜோதி ,டீலக்ஸ், ஆர்.என்.ஆர் ,உட்பட்ட 10 வகை நெல் ரகங்கள் பயிரிட்டுள்ளனர்.
இந்த வருடம் பெய்த நல்ல மழையால் நெற் பயிர்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்தது இந்நிலையில் தற்போது இந்தப் பகுதியில் அறுவடை பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.இருப்பினும் இங்கு அறுவடை செய்த நெல்களை விவசாயிகள் பெரும்பாலும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருகிறார்கள். வியாபாரிகள் இதனால் அதிக லாபம் ஈட்டிச் செல்கின்றனர்.
ஆகவே, அரசு மிக விரைவாக இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.மேலும் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடம் அரசுக்கு சொந்தமான கூட்டுறவு சொசைட்டியின் மற்றும் சேமிப்புக் கிடங்கு, சமுதாய கூடம் மற்றும் பயன்யின்றி இருக்கும அரசு கட்டிடங்கள் அருகே அமைக்க வேண்டும் வேண்டும் என்றும் தனியார் நிலங்களில் அமைக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து விவசாயி கூறுகையில் : போன வருடம் குறிப்பாக தனியார் இடங்களில் நெல் கொள்முதல் அமைக்கப்பட்டதால் அவர்களிடம் நெல் மூட்டைகள் சேமித்து வைக்க கட்டிடம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன இதனால் எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது அது மட்டுமில்லாமல் தனியார் நிலத்தில் வைத்தால் அந்த நிலத்து உரிமையாளருக்கு ஓரு சாக்கு 5 ரூபாய் வீதம் லட்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் நெல்களை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை
ஆகவே மாவட்ட நிர்வாகம் விரைவாக அரசு நேரடி கொள்முதல் மையங்களை விரைவாக நிறுவ வேண்டும்.
அதுவும் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாய தரப்பின் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu