நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்ட  சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
X

நீரில்் மூழ்கிய  நெல்வயல்களை நேரில் பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி.

நீரில் மூழ்கிய நெல் வயல்களில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நெற்பயிர்களை காண்பித்தனர்

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இழப்பீடு தொடர்பாக சேத விவர கணக்கு எடுக்க வருவாய்த்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி வேளாண்துறையினருக்கு உத்தரவிட்டார.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியான செய்களத்துர் ,பறையன்குளம்,செய்யலுர்,சன்னதிபுதுகுளம் ,ஆகிய பகுதிகள் காலையில் ஆய்வை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், செய்களத்துர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட கண்மாய் கரை வழியாக 2கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டர். நீரில் மூழ்கிய நெற்கதிர்களை வயல்களில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நெற்பயிர்களை காண்பித்தனர். பின்னர், சன்னதிபுதுகுளம், செய்யலுர் ஆகிய பகுதியில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், தண்ணீரை வெளியேற்றக்கூடிய வழிகளை ஆய்வு செய்ய உத்தரவு விட்டர். மேலும் சேதமான பயிர்களை வருவாய்த்துறை முலம் கண்க்கு எடுக்க உத்தரவிட்டார்மேலும்,பறையன்குளம் பகுதியில் பள்ளியில் சூழந்த மழை நீறே அகற்ற் உத்தரவிட்டர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் 10தினங்களாக. பெய்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிற்களை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேத விவர அறிக்கையை அரசு அனுப்பி அதற்கான நிவாரண தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் மதுசூதனரெட்டி கூறினார்.

Tags

Next Story
ai healthcare products