மானாமதுரையில் தீபாவளிக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை: வழக்கத்தைவிட விலை உயர்வு

மானாமதுரையில் தீபாவளிக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை: வழக்கத்தைவிட  விலை உயர்வு
X

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கூடிய ஆட்டுச்சந்தையில் திரண்ட வியாபாரிகள்

காலை 5 மணியிலிருந்து சில மணி நேரங்கள் மட்டுமே நடந்த சந்தையில் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன

மானாமதுரையில் தீபாவளிக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை- வழக்கத்தைக் காட்டிலும் விலை உயர்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வியாழக்கிழமை நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. வழக்கத்தைக் காட்டிலும் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தி வீட்டில் அசைவ உணவுகளை சமைத்து பரிமாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமங்களில் தீபாவளி பண்டிகைக்கு வீடுகளில் அசைவ உணவு தயாரிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மானாமதுரையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறும். தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் சந்தை என்பதால் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து ஆடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் குவிந்தனர். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் சேர்ந்தவர்களும் வெளி மாவட்டத்துக்காரர்களும் ஆடுகளை விற்பனை செய்வதற்கு சந்தையில் கூடினர். இவர்கள் பைக், கார், ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றில் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.

காலை 5 மணியிலிருந்து சில மணி நேரங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டுச் சந்தையில் 2ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. தீபாவளிப் பண்டிகை என்பதால் வழக்கத்தை காட்டிலும் ஆடுகளின் விலையும் அதன் ரகம், எடைக்கு ஏற்றவாறு உயர்த்தி விற்கப்பட்டது. இதேபோல் மானாமதுரை சந்தையில் கோழி, சேவல் விற்பனையும் அதிகமாக நடந்தது. கோழி வியாபாரிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கோழிகளை வாங்கிச் சென்றனர். தீபாவளிப் பண்டிகை என்பதால் கோழிகள் விலையும் வழக்கத்தைக் காட்டிலும் விலை அதிகரித்தே காணப்பட்டதுஉயர்ந்தது.

Tags

Next Story
ai solutions for small business