தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட டிவி மற்றும் கிரைண்டர்.

உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதை அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்தல் பறக்கும் படை, தாசில்தார் மகாதேவன் மற்றும் தலைமையில், போலீஸ் எஸ்ஐ அருண் சோழன் மற்றும் போலீசார் அண்ணாதுரை சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட எல்இடி டிவி, கிரைண்டர், ஹோம் தியேட்டர்கள் ஆகியவற்றை இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதன் அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!