பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை
X

திருப்புவனத்தில்,  இடிந்து விழுந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவர், நேற்று மாலை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில், பள்ளி முடியும் நேரம் என்பதால், இதில் எந்த மாணவிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் திருப்புவனத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பள்ளியின் சுற்றுச்சுவர் அடுத்த பகுதியில் தெப்பக்குளம் கட்டப்பட்டு அந்தப் பகுதி உயர்த்தி கட்டப்பட்டதாலும் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai in future agriculture