பேருந்து மேற்கூரையில் புத்தகங்களை வீசி எறிந்து விளையாடிய பள்ளி மாணவர்கள்

பேருந்து மேற்கூரையில் புத்தகங்களை வீசி எறிந்து விளையாடிய பள்ளி மாணவர்கள்

மேற்கூரையில் விழுந்த புத்தகத்தை எடுக்க முயற்சி செய்து, பேருந்தின் சக்கரங்களில் மீது ஏறி நின்ற மாணவர்

பேருந்தின் இரு சக்கரங்களில் மீது ஏறி மாணவர்கள் புத்தகங்களை எடுக்க முயன்ற காட்சி வலைதளங்களில் வெளியாகியுள்ளது

பேருந்து மேற்கூரையில் புத்தகங்களை வீசி எறிந்து விபரீத விளையாட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் பயணிகள் வேதனைக்குள்ளாக்கியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயணிகள் வந்து செல்வது வழக்கம். நகர பேருந்து புறப்படும் நேரத்தில் சக மாணவர்களின் புத்தகங்களை பேருந்தின் மேற்கூரைகள் எறிந்து விளையாடியது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கூரையில் விழுந்த புத்தகத்தை எடுக்க முயற்சி செய்து, பேருந்தின் இரு சக்கரங்களில் மீது ஏறி மாணவர்கள் புத்தகங்களை எடுக்க முயன்ற காட்சி வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க முயன்றாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் படிப்பின் அருமையை உணராமல் இவ்வாறாக அலட்சியப் போக்கை கொண்டிருப்பது, அனைவரிடத்திலும் வேதனைையும் அதிர்ச்சியையும் அடையச் செய்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை, பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் காவல்துறையினரும் கண்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story