சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழா

சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழா
X

சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கும்பாபிசேக விழா

சிவகங்கை மாவட்டம், சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது சாத்தமங்கலம் சுற்று வட்டார 16 கிராமங்களுக்கு காவல் தெய்வமாக கருதப்படும் முனீஸ்வரர் ஆலய கும்பாபிசேகம் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை யாகசாலையில் இருந்து சுமந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் .விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தமங்கலம் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!