குடியரசு தின விழா: மானாமதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

குடியரசு தின விழா: மானாமதுரை  ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
X

மானாமதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

குடியரசு தின விழாவையொட்டி மானாமதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்தியா முழுவதும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். பின்னர் ரயிலில் செல்லும் பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது.


மானாமதுரை வைகை ஆற்று ரெயில்வே பாலத்தில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையில் சோதனை செய்தனர் இதில் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர். தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!