கீழடி தொல்பொருள் கண்காட்சியை பார்க்க வந்த கலெக்டரிடம் ஆட்டோகிராப் வாங்கிய சிறுவர்கள்

கீழடி தொல்பொருள் கண்காட்சியை பார்க்க வந்த கலெக்டரிடம் ஆட்டோகிராப் வாங்கிய சிறுவர்கள்
X

கலெக்டரிடம் ஆட்டோகிராப் வாங்கும் மாணவர்கள்.

கீழடி தொல்பொருள் கண்காட்சியை பார்க்க வந்த கலெக்டரிடம் சிறுவர்கள் ஆட்டோகிராப் வாங்கிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழடி தொல்பொருள் கண்காட்சியை பார்வையிட குடும்பத்துடன் வந்த மாவட்ட ஆட்சியரிடம் கீழடி புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கிய சிறுவர்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர் கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் 7கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை இந்த அகழாய்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கபட்ட பொருட்களை பார்வையிட பொதுமக்களுக்கு கீழடியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை முடிந்ததும் பொதுமக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சியியை குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தொல்லியல் துறையினர் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து போதுமான விளக்கத்தை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கீழடியில் வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியை பார்ப்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் இன்று கீழடிக்கு வந்திருந்தார். அவருக்கு கீழடி தொல்லியல் துறையினர் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது கீழடியில் உள்ள கண்காட்சியைப் பார்க்க வந்த பள்ளி சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கீழடியில் வரலாறு குறித்து புத்தகத்தை வாங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடம் அந்த புத்தகத்தில் ஆட்டோகிராஃப் வாங்கி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story