கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் ஆய்வு

கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் ஆய்வு
X
திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் செல்லும் வழியில் கீழடி அகழாய்வு தளத்திற்கு வந்த சந்திரமோகன் அங்கு ஏழாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டார்.

அதன்பின் இங்கு கிடைத்த தொன்மையான பொருள்கள் குறித்து அங்கிருந்த தொல்லியல் ஆய்வாளர்களிடம் விபரம் கேட்டறிந்தார். ஏழாம் கட்ட அகழாய்வு குறித்தும் அதில் கிடைத்துவரும் பொருள்கள் பற்றியும் தொல்லியல் ஆய்வாளர்கள் முதன்மைச் செயலர் சந்திரமோகனிடம் விளக்கிக் கூறினர்.

அதன்பின் கீழடியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அகழ் வைப்பகம் கட்டிட பணியையும் அவர் பார்வையிட்டார். கட்டிட பணி நடைபெற்று குறித்து பொறியாளர்கள் அவரிடம் விளக்கம் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் தொல்லியல் துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!