சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
X
 மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வைகை கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வைகை கரை அய்யனார்,மற்றும் அருள்மிகு அலங்காரகுளம் ஸ்ரீ சோனையா கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக யாக சாலையில் பூஜை செய்யப்பட்டு புனித நீர் கோவிலை சுற்றி வந்து கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் பரிகார தெய்வங்களான சுவாமி ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீலாடசன்னாசி , ஸ்ரீ ராக்கச்சி அம்மன் ,ஸ்ரீ மாயாண்டி சுவாமி , மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கோவில் கோபுரங்களிலும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


இதில் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!