மானாமதுரை இரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மானாமதுரை இரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

மானாமதுரை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகளின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்

மானாமதுரையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்க்கு மாற்றுத்தினாளிகள் மாவட்டம் துணை தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை அரசு ரத்து செய்யக்கூடாது எனவும் முன்பு இருந்த அனைத்து சலுகைகளையும் அப்படியே நடைமுறை படுத்த வேண்டும் எனவும்,

புதுச்சேரி மற்றும் சண்டிகார் போன்ற யூனியன் பிரதேசங்களில் இருப்பதை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பொட்ரோல் மானியம் வழங்க வேண்டும்,

இரயிலில் இருந்த சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது மற்றும் பிளாட்பாரம் டிக்கட் கட்டணம் உயர்வையும் கண்டித்தனர்.

போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சங்கர் அம்பேத்கர் மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் எண்ணற்ற மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai healthcare technology