மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் தை வெள்ளி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
மடப்புரம் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
மடப்புரம் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் தை மாத வெள்ளிகிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர்.
இத்திருக்கோவிலில் விநாயகப் பெருமான் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமி பரிவார தெய்வங்கள் மற்றும் பிரதான அம்மனாக ஶ்ரீ பத்ரகாளி அம்மன் பிரமாண்ட குதிரை சிலை கீழ் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் தை மாதம் ஆடி மாதம் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை யொட்டி அம்மனுக்கு பக்தர்கள் சமர்ப்பித்த எலுமிச்சை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அகல் விளக்கு எலுமிச்சை பழம் விளக்கு ஏற்றி அம்மனை மனம் உருகி வழிபாடு செய்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu