உள்ளாட்சித்தேர்தல்:திருப்புவனத்தில் பறக்கும் படையினர் 2 இடங்களில் பணம் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினர்
திருப்புவனத்தில் தேர்தல் விதிமுறையின்படி பறக்கும் படையினர் இரண்டு இடங்களில் பணம் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இன்று இராஜரத்தினம் தலைமையில் பறக்கும் படை தனிப்பிரிவு திருப்புவனம் வேலம்மாள் பள்ளி அருகே சுமார் 4 மணியளவில் சோதனை செய்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதுரை சக்கிமங்கலம் சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அருண்குமார் போதிய ஆவணம் இன்றி சுமார் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருந்தார்.
அதை ராஜரத்தினம் பறிமுதல் செய்து திருப்புவனத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும் அதே தனிப்படையினர் மாலை 7 மணி அளவில் திருப்புவனம் பழையூர் ரயில்வே கேட் அருகில் சோதனை செய்த போது எந்தவித ஆவணம் இன்றி மேலராங்கியத்திலிருந்து தமிழரசன் என்பவர்கொண்டுவந்க 84 ஆயிரம் ரூபாய்க்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணமும் திருபுப்வனம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu