வைகை ஆற்று கரையோரம் அமைந்திருக்கும் அப்பன் பெருமாள் கோவிலில் குடமுழுக்கு விழா

வைகை ஆற்று கரையோரம் அமைந்திருக்கும் அப்பன் பெருமாள் கோவிலில் குடமுழுக்கு விழா
X

வைகை ஆற்று கரையோரம் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற அப்பன் பெருமாள் கோவிலில் குடமுழுக்கு விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் கரையோரம் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அப்பன் பெருமாள் கோயிலில் குடமுழுக்குவிழா நடைபெற்றது.இதையொட்டி கோயில் உள்ளே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு நேற்று யாக பூஜைகள் தொடங்கின.

இதனை தொடர்ந்து இன்று கருட பகவான் வானில் வட்டமிட தரிசனம் தர முலவர் அப்பன் பெருமாள் சுவாமி விமானக் கலசத்தின் மீது வேதமந்திரங்கள் முழங்க கலசநீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கலச நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில், மானாமதுரை வசிக்கும் நகர்ப்புற மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப் புற மக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil