/* */

15 ஆண்டுகளுக்குப்பின்னர் நிரம்பிய கண்மாய் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயப்பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு சொசைட்டி கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

HIGHLIGHTS

15 ஆண்டுகளுக்குப்பின்னர்  நிரம்பிய கண்மாய் விவசாயிகள் மகிழ்ச்சி
X

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா அருகே உள்ள பூவந்திகிராமத்தில் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் நிரம்பிய கிராமம். 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பதினைந்து வருடம் கழித்து கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா அருகே உள்ள பூவந்தி கிராமத்தைச் சார்ந்த சுமார் 1000 ஏக்கர் பரப்புள்ள கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் நம்பியே சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிராமத்தை சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 15வருடங்களுக்கு பிறகு கண்மாய் நிறைந்துள்ளது. இதனால் தண்ணீர் நிறைந்து அருவிபோல் மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந் நிலையில், இந்த கண்மாயை தூர் வாராமல் இருப்பதால் தண்ணீர் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது, இரண்டு போகம் விளையக்கூடிய கண்மாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஆகவே இந்த கண்ணமாய் முறைப்படி தூர்வார வேண்டும் என்றும்.கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், தற்போது தான் கண்மாயில் நீர் உள்ளதைப் பார்த்து விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கூட்டுறவு சொசைடியில் கடன் வாங்க விவசாயிகளுக்கு வி.ஏ.ஒ அடங்கல் சான்றிதழ் வழங்க மறுப்பதுடன் விதைத்த பயிர் வெளியே வந்தால்தான் சான்றிதழ் தரப்படும் என்றும், கூட்டுறவு சொசைட்டி குறித்த காலத்துக்குள் நீங்கள் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கடன் வழங்கப்படாது அதிகாரிகள் தரப்பில் கூறுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கூட்டுறவு சொசைட்டியில் கடன் வழங்குவதற்குகான காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பதினைந்து வருடம் கழித்து கண்மாய் நிரம்பி உள்ளது மிகவும் மகிழச்சியாக இருக்கிறது தற்போதுதான் விவசாயத்தை தொடங்கியுள்ளோம். அதனால் கூட்டுறவு கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் மேலும் கண்மாயை முறை படித்து தூர்வார வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.



Updated On: 6 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!