கீழடி அகழாய்வில் தந்தத்தினாலான பகடை கண்டெடுப்பு
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தால் ஆன பகடை.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகரம் கொந்தகை மணலூர் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு ஆய்வு பணி நடந்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடியில் இதுவரை மண்பானை, காதில் அணியும் தங்க வளையல், நெசவுத்தொழில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் மற்றும் கண்ணாடி பாசிகள், சூதுபவளம், படிகம், எடைக்கற்கள், ஆணி, சிறிய செம்பு மோதிரம், வெள்ளிக்காசு, உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கீழடி அகழாய்வில் அழகிய வேலைப்பாடு கொண்ட சதுர வடிவிலான தந்தத்தினால் செய்யப்பட்ட பகடை 54 சென்டிமீட்டர் ஆழத்தில் அகழாய்வு குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பகடையின் ஒவ்வொரு பக்கத்தின் முகங்களும் ஒரு புள்ளியை சுற்றி 2 வட்ட கீறல்களால் 1 முதல் 6 வரையிலான எண்ணிக்கை கொண்ட வடிவத்தினை கொண்டுள்ளது. இப்பகடையானது 1.5 செ.மீ அளவுடையதாகவும் 4 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu