/* */

இளையான்குடி ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் மாற நாயனார் குருபூஜை

இளையான்குடியில் உள்ள ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமி கோவிலில், மாற நாயனார் குருபூஜை நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

இளையான்குடி ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் மாற நாயனார் குருபூஜை
X

இளையான்குடி அருள்மிகு ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில்,  மாற நாயனார் குருபூஜை நிறைவு விழா நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள, புராண சிறப்பு மிக்க மிக பிரசித்தி பற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை அம்பாள் சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில், மாறனார் குருபூஜை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இத்திருக்கோவிலில், தனிசன்னதியில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ மாறன் நாயனார் தனது மனைவியான புனிதவதி அம்மையாருடன் அருள்பாலித்து வருகிறார்.


தானத்தில் சிறந்தது அன்னதானம் இந்த அன்னதானத்தையே வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மாறநாயனார் மற்றும் புனிதவதி அம்மையார் தேடி வந்த அடியார்கள் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு செய்து வந்துள்ளார். அன்னம் பாலிப்புபை செவ்வனே செய்து வந்த மாற நாயனாருக்கும் புனிதவதி தாயாருக்கும், அடியார்கள் வேடத்தில் வந்த சிவபெருமானே காட்சி தந்தார். அன்றிலிருந்து அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரானார் மாற நாயனார்.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மக நட்சத்திரத்தில் குருபூஜை விழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை துவங்கியது. முன்னதாக மூலவர் மாற நாயனார் புனிதவதி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர்கள் ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் ஸ்ரீ ஞானாம்பிகை ஸ்ரீ மாற நாயனார் ஸ்ரீ புனிதவதி அம்மையார் ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கோபுர தீபம், கும்ப தீபம் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டன.


இதனைத் அடுத்து, பெரிய ரிஷப வாகனத்தில் உற்சவ தெய்வங்கள் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சேலம் திருமுறை சைவநெறி குருநாதர் தவத்திரு தேசிகர் சுவாமிகளின் சொற்பொழிவு மற்றும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர், உற்சவர் தெய்வங்களுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் தெய்வங்களை பல்லக்கில் எழுந்தருள செய்து, கோவில் வெளி மண்டபத்தில் கொண்டு வந்தனர். மாற நாயனார் மற்றும் புனிதவதி அம்மையாரையும் சுவாமி அம்மன் சுற்றி வந்தனர். கைலாய வாத்தியங்கள் மற்றும் பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று சுவாமியை வழிபட்டனர்.

Updated On: 8 Sep 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்