இளையான்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல்: காவலர் உயிரிழப்பு

இளையான்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல்: காவலர் உயிரிழப்பு
X

திருவேங்கடத்தில் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காவலர் சுரேஷ்.

இளையான்குடி அருகே திருவேங்கடத்தில் இருசக்கர வாகனம் அரசு பேருந்து மோதல். சம்பவ இடத்திலேயே காவலர் உயிரிழப்பு.

இளையான்குடி அருகே திருவேங்கடத்தில் இருசக்கர வாகனம் அரசு பேருந்து மோதல் - காவலர் சம்பவ இடத்திலேயே பலி.

சிவகங்கை மாவட்டம் இளமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சாலைக்கிராம காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயது மற்றும் நான்கு வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் சிவகங்கையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பேரிடர் மேலாண்மை குழுவில் தனது பணியை முடித்துவிட்டு இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் வரும்போது எதிரே பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மோதியதில் காவலர் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை இளையாங்குடி காவல்துறையினர் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story