பள்ளி சுவரின் முகப்பு பகுதி சிலாப் இடிந்து விழுந்தது: 2மாணவர்கள் காயம்

பள்ளி சுவரின் முகப்பு பகுதி சிலாப் இடிந்து விழுந்தது:  2மாணவர்கள் காயம்
X

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.இந்தப்பள்ளியில் சுமார் 15 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இப்பள்ளியில் பயிலும் சங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த 6 வயதே ஆகும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களான நித்தீஷ் மற்றும் சுபஸ்ரீ பள்ளியை விட்டு வெளியேறும் போது பள்ளியின் முகப்பில் இருந்த மேற்கூரையின் சிலாப் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்களின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இதில் நித்திஷ் என்ற மாணவருக்கு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளது மற்றும் சுபஸ்ரீ கை மற்றும் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக ஆசிரியர்கள் இவர்களை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இப்பள்ளியில் பல கட்டிடங்கள் இன்னும் இடியும் நிலையில் உள்ளன. மிக மோசமான நிலைமை உள்ளது, இருந்தும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று ஊர் தரப்பினர் பொதுமக்கள் ஆசிரியர் குற்றம்சாட்டு கின்றனர். மேலும் இச்சம்பவம் இப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!